Lingua   

L'Internationale

Eugène Pottier
Pagina della canzone con tutte le versioni


TANGUT / TANGUT
சர்வதேச கீதம் [1]

பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள்
பாரில் கடையரே எழுங்கள் வீறுகொண்டு தோழர்காள்
கொட்டுமுரசு கண்டனம் முழக்கமெங்கும்குமுறிட
குதித்தெழு புதுவுலக வாழ்வதில் திளைத்திட

பண்டையப் பழக்கமெனும் சங்கிலி அறுந்தது
பாடுவீர் சுயேட்சை கீதம் விடுதலை பிறந்தது
இங்கு புதியமுறையிலே இப்புவனமும் அமைந்திடும்
இன்மை சிறுமைதீர நம் இளைஞருலக மாகிடும்

தொன்று தொட்டுழைத்த தொழிலாளி விவசாயிகள்
தோழராயினோம் உழைப்போர் யாவரேனும் ஓர்குலம்
உண்டுநம் உழைப்பிலே உயர்ந்தவர்க்குச் சொல்லுவோம்
உழைப்பவர்கள் யாவருக்கும் சொந்தம் இந்த உலகெல்லாம்

மக்களின் உழைப்பெலாம் மறைத்து வைத்து ஒருசிலர்
பொக்கிசங்களில் கிடந்து புரளுகின்றதறிகுவீர்
இக்கணம் அதைத்திரும்பக் கேட்பதென்ன குற்றமோ
இல்லைநாம் நமக்குரிய பங்கைத்தானே கேட்கிறோம்

பாடுபட்டுழைத்தவர் நிணத்தைத் தின்ற கழுகுகள்
பறந்தொழிந்து போதல் திண்ணம் பாரும் சிலநாளதில்
காடுவெட்டி மலையுடைத்துக் கட்டிடங்கள் எழுப்புவோம்
கவலையற்ற போகவாழ்வை அனைவர் உரிமையாக்குவோம்


tanguto
[1] carvatēca kītam

paṭṭiṉik koṭuñciṟaikkuḷ pataṟukiṉṟa maṉitarkāḷ
pāril kaṭaiyarē eḻuṅkaḷ vīṟukoṇṭu tōḻarkāḷ
koṭṭumuracu kaṇṭaṉam muḻakkameṅkumkumuṟiṭa
kutitteḻu putuvulaka vāḻvatil tiḷaittiṭa

paṇṭaiyap paḻakkameṉum caṅkili aṟuntatu
pāṭuvīr cuyēṭcai kītam viṭutalai piṟantatu
iṅku putiyamuṟaiyilē ippuvaṉamum amaintiṭum
iṉmai ciṟumaitīra nam iḷaiñarulaka mākiṭum

toṉṟu toṭṭuḻaitta toḻilāḷi vivacāyikaḷ
tōḻarāyiṉōm uḻaippōr yāvarēṉum ōrkulam
uṇṭunam uḻaippilē uyarntavarkkuc colluvōm
uḻaippavarkaḷ yāvarukkum contam inta ulakellām

makkaḷiṉ uḻaippelām maṟaittu vaittu orucilar
pokkicaṅkaḷil kiṭantu puraḷukiṉṟataṟikuvīr
ikkaṇam ataittirumpak kēṭpateṉṉa kuṟṟamō
illainām namakkuriya paṅkaittāṉē kēṭkiṟōm

pāṭupaṭṭuḻaittavar niṇattait tiṉṟa kaḻukukaḷ
paṟantoḻintu pōtal tiṇṇam pārum cilanāḷatil
kāṭuveṭṭi malaiyuṭaittuk kaṭṭiṭaṅkaḷ eḻuppuvōm
kavalaiyaṟṟa pōkavāḻvai aṉaivar urimaiyākkuvōm



Pagina della canzone con tutte le versioni

Pagina principale CCG


hosted by inventati.org